என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் எழுந்து வருகின்றார் எண்ணில்லா அருளை அன்புடனே தலைவன் தருகின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் எழுந்து வருகின்றார்

எண்ணில்லா அருளை அன்புடனே தலைவன் தருகின்றார் - 2 (2)


1. உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே

இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுமே -2

பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே - அந்த

முகிலும் இருளும் கறையும் தீர முழுமை தோன்றுமே


2. என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே

என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் -2

என்று பகர்ந்த இறைவா எம்மை இணைக்க வாருமே - உந்தன்

அன்பு விருந்தை நாளும் அருந்தி அமைதி காணுமே