எத்துணை நன்று எத்துணை நன்று அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எத்துணை நன்று எத்துணை நன்று

அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது - எத்துணை நன்று - 2


1. ஒரு கொடிக் கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று

அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் ... ... (2)

ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் ... ...

இன்று ஒரே வித அழைப்பை நாம் பெற்றுக் கொண்டோம் ... ...


2. புதியதோர் உலகம் கண்டிடுவோமே ... ...

அதில் புதுமை வாழ்வை அடைந்திடுவோமே ... ... (2)

பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே ... ...

இன்று இறைவனில் ஒன்றாய் இணைந்திடுவோமே ... ...