♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்வாழும் தந்தாய் எந்நாளும் உம்தம்
பொன்நாமம் வாழ்க புவிபோற்ற வாழ்க (2)
இருளெல்லாம் விலக அருளாட்சி வருக -2
மருள் நீக்கி எம்மை மகிழ்விக்க வருக
1. திறம்பாது உம்தம் திருவுள்ளம் விண்ணில்
நிறைவேறல் போல நிலமீதும் வேண்டும் (2)
அறங்காத்து என்றும் அருளோடு வாழ -2
உரஞ்சேர்க்கும் உணவை உவப்போடு தாரும்
2. இன்னாது செய்து இகழ்தோரை நாங்கள்
எண்ணாது அன்றே மன்னித்தல் போல (2)
எண்ணேதும் இல்லா எம்பாவம் தம்மை -2
அன்போடு மன்னித்து அருள்செய்ய வேண்டும்
3. நலியாத வலியார் சோதனைகள் வெல்ல
புவிமீது தீமை அணுகாது வாழ (2)
எமையாளும் வேந்தே இணையில்லா தந்தாய்
உமை நாங்கள் வேண்டி ஒன்றாகத் தொழுதோம்
ஒன்றாகத் தொழுதோம் - 2