தியாகதீபம் இயேசுவின் பிரசன்னம் என்னைத் தேடிவந்த தேவ அன்பின் பிரசன்னம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தியாகதீபம் இயேசுவின் பிரசன்னம் - என்னைத்

தேடிவந்த தேவ அன்பின் பிரசன்னம் (2)

மன்னிக்கின்ற மனதில் இயேசு பிரசன்னம் -2

மனித நேயம் தேடுவோரின் பிரசன்னம்

பிரசன்னம் -4


1. கடலில் தவிப்போர் காணும் இயேசு பிரசன்னம்

கலங்கி புயலில் நிற்போர் காணும் பிரசன்னம் (2)

மயங்கும் மாலைப் பொழுதில் இயேசு பிரசன்னம்

மயக்கும் மலர் அமைதி தரும் பிரசன்னம்

ஒளியே உயிரே உண்மையின் வடிவே

என்னில் தருவாய் பிரசன்னம் - எம்மில் தருவாய் பிரசன்னம்

கருணைக் கடலே கனிந்த அன்பே

என்னில் தருவாய் பிரசன்னம் - எம்மில் தருவாய் பிரசன்னம்


2. பாசமுள்ள நெஞ்சில் இயேசு பிரசன்னம்

பகிர்ந்து வாழும் மனிதர் நடுவில் பிரசன்னம் (2)

பாவ வாழ்வை நீக்கும் இயேசு பிரசன்னம்

பரிவு கொண்ட பணியில் இயேசு பிரசன்னம் - ஒளியே ... ...