♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மழலை சிரிப்பும் குழந்தை மனமும் நிலைத்திடவேண்டும்
விண்ணகத்தில் நுழையும் பேற்றினை நானும் அடைந்திடவேண்டும்
இறைவா இறைவா நீ என்னோடு இருப்பாய்
நானும் நாளும் உன்னோடு இருப்பேன் (2)
கரம் பிடித்து நான் நடந்திடுவேன்
உன் முகம் பார்த்து தினம் மகிழ்ந்திடுவேன்
உம்மைப்பாடிப் புகழ்ந்திடுவேன் என் இயேசுவே -2
1. அருகினில் இளைய நெஞ்சங்களை அழைத்தீர்
இருகரம் விரித்து அன்போடு அணைத்தீர் (2)
குழந்தை உள்ளம் இறைவன் இல்லமென்று நற்செய்தி உரைத்தீர்
இறைவன் அரசில் நீங்காத இடம் அளித்தீர் - கரம் பிடித்து...
2. உம் சாயல் கொடுத்து உயர்வாகப் படைத்தீர்
வாய்மையில் தூய்மையில் வளர்ந்திடப் பணித்தீர் (2)
கொடியில் இணைந்த கிளையாய் என்னை
உன்னோடு இணைத்தீர்
உலகில் சென்று பலன்தர எனை அழைத்தீர் - கரம் பிடித்து...