♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உள்ளத்திலே உள்ளதெல்லாம்
உம்மிடம் கொண்டு வந்தேன் (2)
ஏற்று அருளும் இறைவா இரக்கம் தந்தருளும்
1. சிலுவையின் மறுபுறத்தே என் சிறுமை யாவும் அறைந்தேன்
பலியிது தகும் பலியே நான் பலிப்பொருள் வேறறியேன் (2)
உரிமை வாழ்வு பெறவே வெறுமையாகிப் பணிந்தேன்
2. அறிவியல் தந்த கனிகள் அளவில்லாத பிணிகள்
அன்பு மறந்த பாதை அதில் அனுதினம் வெறும் வாதை (2)
அறிந்து வருந்திப் பணிந்தேன் அன்பின் பலியில் இணைந்தேன்