அருள் நிறையே எங்கள் மரியே உன் நாமம் என்றும் வாழ்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள் நிறையே எங்கள் மரியே

உன் நாமம் என்றும் வாழ்க

திருஉருவே எங்கள் அன்னையே உன் அன்பு என்றும் வாழ்க (2)


1. கருவினில் இறைவனைத் தாங்கிடவே

இறைவனும் உன்னையே தெரிந்துகொண்டார் (2)

இதயத்தில் இறைவனைச் சுமந்திடவே

இறைவனும் மனிதனைத் தேர்ந்துகொண்டார் (2)

இதயமும் இறைவனின் கருவறையே

அருள் ஒளி மலர்ந்திடும் வைகறையே


2. ஆகட்டும் என்றொரு சொல்லினிலே

மீட்பினை உலகுக்கு நீ தந்தது (2)

ஆகட்டும் என்றே இறை பணிந்தால்

மீட்பரின் பணிகளைத் தொடர்கின்றது (2)

இறைவனின் திருவுளம் நிறைவேறினால்

அருள் நிறை உலகமே பிறக்கின்றது