♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தினந்தோறும் தினந்தோறும் உனைநானும் தேடி
வருவேன் உன் சந்நிதி என்றும் நீதான் வாழ்வின் கதி
இப்போதும் எப்போதும் கவிநூறு பாடி
தொழுவேன் உன் சந்நிதி என்றும் நீதான் வாழ்வின் கதி
ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும்
ஒரு தீண்டல் அது போதுமே என்றும்
என் வாழ்வே உனதாகுமே
1. வழியெங்கே எனத்தேடி விழியேங்கும்போது
நான் தேடும் வழியாகும் உன் சந்நிதி (2)
வரும்கோடி உனைநாடி மனம் தேடும்போது
நான் காணும் கதியாகும் உன் சந்நிதி
நதி கூடும் கடலாக விழிமூடும் இமையாக
கவிபாடும் குயிலாக கனியூட்டும் சுவையாக
வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒருபார்வை
2. சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது
சுமைதாங்கும் கரமாகும் உன் சந்நிதி (2)
சொந்தங்கள் இனியெங்கே என ஏங்கும்போது
உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி
பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக
மழை தேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக
வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒருபார்வை