என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே - 2

எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே


1. மலரைப்போல் எந்தன் மனதினை தினம்

திறந்து காத்திருந்தேன் (2)

காலைப்பொழுதாக எழும் கதிரே எனக்காக

எழுந்து மலர்ந்து இதயம் திறந்து வல்ல தேவன்

என்னில் எழுந்தார்


2. நிலவைப்போல் எந்தன் மனதினில் நீர்

ஒளிரக் காத்திருந்தேன் (2)

மாலைப்பொழுதாக எழும் மதியே எனக்காக

இதயமதிலே உதயமாவாய் புதிய வாழ்வினையே தருவாய்