♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பொன்மலர் பாதமே என்மனம் சேரவே
விடியலின் வெற்றி வேந்தனே
இதை ஏற்றுக்கொள்ளுமே - 2 இறைவா
1. தளர்வுற்று சோர்ந்த உள்ளம் தயவுக்கு ஏங்கும் உள்ளம்
மகிழ்வுற்று வாழவேண்டும் உந்தன் சங்கமம் (2)
உந்தன் சங்கமம் என்றும் உன்னில் சங்கமம் -2
2. உறவற்று வாழும் உள்ளம் உறவுக்கு ஏங்கும் உள்ளம்
இன்புற்று வாழவேண்டும் உந்தன் சங்கமம் (2)
உந்தன் சங்கமம் என்றும் உன்னில் சங்கமம் -2