அருட்கனியே என் அகநிலவே என் இருளினை நீக்கிட வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருட்கனியே என் அகநிலவே என்

இருளினை நீக்கிட வா

அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா


1. ஆயிரம் வாழ்த்தொலிகள் உம்மை

ஆராதனை செய்யும் தீபங்களோ (2)

ஆனந்தம் பொழிந்திட வா இன்ப

ஆறுதல் அளித்திட வா இறைவா


2. நல்லறம் காப்பவனே நீ

இல்லாமல் என் வாழ்வு நன்றாகுமோ (2)

ஆலயம் வாழ்பவனே உள்ள

ஆறுதல் அளித்திட வா இறைவா