என்னைத் தந்திட எழுந்து வருகிறேன் எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னைத் தந்திட எழுந்து வருகிறேன்

எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே (2)

என்னைத் தந்திட எழுந்து வருகிறேன்


1. மாறிட மறுக்கும் என் மனதினைத் தருகிறேன்

மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன் (2)

இழந்து நான் பலியாகி ஆ - 2 இறை உன்னைத் தந்திடவே

ஏற்றிடு மாற்றிடு எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு


2. பகைமை வளர்க்கும் என் உணர்வினைத் தருகிறேன்

பாசம் வளத்திட உன் உறவைக் கேட்கிறேன் (2)

உறவின் கரமாகி ஆ - 2 உனதருளைக் கண்டிடவே

ஏற்றிடு மாற்றிடு எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு