♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைமணம் பரப்பிடவே மறைநெறி தனைக் காத்திடவே
இறைத்தூதராம் சவேரியாரே
வந்தோம் உன் புகழ் பாடிடவே
1. வாழ்வெல்லாம் இறைவனைப் புகழ்ந்தவர் நீர்
வழி எல்லாம் அவர் கரம் பிடித்தவர் நீர்
சோதனை வாழ்வினை வென்றவர் நீர்
சாதனை எங்கும் படைத்தவர் நீர்
2. முத்துக்குளித்துறையின் முனிவரே நீர்
தத்துவம் பலகற்ற கலைஞனும் நீர்
ஆன்ம தாகத்தால் அலைந்தவர் நீர்
அணையாத ஜோதியாய் நிலைத்தவர் நீர்