♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சாமி நம்ம சாமி சாமி இயேசு சாமி
சாமி பொதுவான சாமி இயேசு சாமி பொதுவான சாமி
ஏழ எளியவர்க்கும் செல்வமுள்ள செல்வந்தர்க்கும்
வேண்டியத தருவதற்கும் வேண்டாதத எடுப்பதற்கும்
1. இயேசு பிறந்ததொரு குடிசையிலே
ஏழ சனங்களோட மத்தியிலே
நல்லா நெனச்சு பாரு புத்தியிலே - அவர்
இருக்காரு ஒன்னோட மனசினிலே
சாமி பெத்த சாமி இந்த பூமியிலே மனுசனாக
வந்ததெந்த சேதி எதுக்கு புரியலயா
மனுசன மனுசனாக மதிக்கும் வழியைச் சொன்ன
மகராசனோட பாத ஒனக்குத் தெரியலயா
சாமி நம்ம சாமி சாமி இயேசு சாமி
2. அடிதடி சண்டையுள்ள பூமியிலே
அன்பாய் இருக்கச் சொல்லி வந்தவரு
சொன்னதெல்லாம் சொன்னதோடு நிக்கையிலே
சொன்னதெல்லாம் சொன்னபடி செஞ்சவரு
நேசத்தோடு பாசமுடன் நித்தமும் இயேசுவைப்போல்
வாழ வழி அமைத்திட வேணுமய்யா
கள்ளம் கபடம் இல்லாத குழந்தையைப் போலிருந்தால்
அவர் மனசில் நீதானே முதல்வனய்யா
சாமி நம்ம சாமி சாமி இயேசு சாமி
சாமியை நம்பு நம்பு அவர் வரவே தெம்பு தெம்பு
ஏனய்யா வம்பு தும்பு எல்லாம் இங்கே அன்பு அன்பு