இறைமனித சங்கமம் நிகழும் இடமிது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைமனித சங்கமம் நிகழும் இடமிது

அன்புறவின் புனிதமும் கமழும் நாளிது

அமைதி இங்கே பிறக்குது அர்ப்பணம் இங்கே வளருது

நானிலத்தை மகிழ்ச்சியினால் நிரப்புது (2)


1. அன்பர் பணி செய்திடவே இன்ப நிலை அடைந்திடவே

அன்புக் குரல் நெஞ்சமதில் ஒலிக்குது

அன்பில் சேவை மலர்ந்திடவே கரங்கள் உலகில் தழைத்திடவே

அருள் மழை உள்ளங்களை நனைக்குது

அன்பு ஊற்று சுரக்கும் இடம் தியாகப் பணியன்றோ

அத்தகு செயலில் நிறைவுகாணல் தெய்வச் செயலன்றோ (2)

புனிதமான பணி வாழ்வில் உருவாகும் சங்கமமே

இறை மனிதம் அதுவே இறை மனிதம்


2. ஓங்கும் கொடுமை ஒழிந்திடவே மடியும் உயிர்கள் உயிர்த்திடவே

ஒற்றுமையின் சின்னங்களாய் வாழ்ந்திடுவோம்

வன்முறை நீங்கி வாழ்ந்திடவே மனித நேயம் காத்திடவே

மதங்கள் கடந்த உறவுக்காக உழைத்திடுவோம்

சாதி சண்டைகள் சமய மோகங்கள் அலகை நிறங்களே

சத்திய நெறியில் உதிக்கும் வீரம் இறைவன் முகங்களே (2)

அருள் வாழ்வின் ஞானத்தில் எழுகின்ற புதுவாழ்வே

இறைமனிதம் அதுவே இறைமனிதம்