இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே இணைவோம் பலிசெய்து மகிழ்வோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே

இணைவோம் பலிசெய்து மகிழ்வோம்

இகத்தினில் இறைவனின் புகழ்ச்சிகளை

இன்றும் என்றும் சாற்றிடுவோம்


1. மண்ணின் மாந்தரில் நம்மை - சொந்த

மக்களாய் தேர்ந்து கொண்டார்

கண்ணின் இமைபோல் என்றும் - நம்மை

கருணையில் காத்து வந்தார்

பாடிப் புகழ்ந்திடுவோம் பலியில் பலன் பெறுவோம்


2. பிரிந்து மறந்திட்ட போதும் - செய்த

உடன்படிக்கையை அவர் நினைத்தார்

வருந்தி சோர்ந்திட்ட நேரம் - உடன்

இருந்து விருந்தும் அளித்தார்