♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் இயேசுவே உன் வார்த்தையே
என் பாதை காட்டிடும் ஒளியாகுமே
உன் பாசமே என் தாகத்தை எந்நாளும் தீர்த்திடும் அமுதாகுமே (2)
நாளும் உனதெழில் நாமம் பாடிப் பாடி கூவும் சிறுகுயில் நான் -2
1. உனதருள் மொழி எனதிருவிழியே
தினமெனக்கது நலந்தரும் வழியே
அனுதினமது எனதுயிர் உணவே
மனம் மொழி செயல் அதில் சிறந்திடுமே
இறைவனின் குரலே இதயத்தின் மகிழ்வே
திறன் எனக்கருளும் திருமறைப் பொழிவே
2. புயலினை அன்று அடக்கிய வார்த்தை
பயம்விடு என்று தேற்றிய வார்த்தை
இருபுறம் நல்ல கருக்குள்ள வாளாய்
எனை வருத்திடும் இடர் தகர்த்திடுமே
இறைவனின் குரலே... ...