மன்னன் இயேசு பிறந்துவிட்டார் விண்ணையும் மண்ணையும் இணைத்துவிட்டார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மன்னன் இயேசு பிறந்துவிட்டார்

விண்ணையும் மண்ணையும் இணைத்துவிட்டார்

பூலோகம் மகிழ்ந்து பாடுதே இனி

நாளெல்லாம் வசந்தம் வீசுமே (2) - தந்தன தானா...


1. தெய்வம் இங்கு மனித ரூபம் எடுத்து வருகிறார்

தேடி நம்மை மீட்டுக்கொள்ள விரைந்து வருகிறார் (2)

களங்கமில்லா அன்பை நாளும் காட்டுவார்

கலங்கிடாத நெஞ்சம் நம்மில் அருளுவார்

மகிழ்ச்சியோடு தினமும் பாடுவோம்

பாலனை நாம் புகழ்ந்து பாடுவோம் - தந்தனே தாண...


2. உலகை ஒரு குடும்பமாக மாற்ற வருகிறார்

உறவின் பாலம் அமைத்திடவே உலகில் வருகிறார் (2)

உள்ளம் குமுறும் அனைவருக்கும் மகிழ்வு தருகிறார்

உண்மை நீதி அமைதி நமக்கு கொண்டு வருகிறார்

மகிழ்ச்சியோடு தினமும் பாடுவோம்

பாலனை நாம் புகழ்ந்து பாடுவோம்