அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அம்மா மரியே வாழ்க - 2

மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

எங்கள் மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க


1. அறியாத மாந்தருக்கு அறியவைத்தாய் - உனை

ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய் (2)

மறையாத வான் நிலவாய் மாறாத வான் மழையாய் - 2

திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க - 3


2. உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா - உன்

அருகாமை காண இருள் விலகுதம்மா (2)

உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை -2

உம் சன்னிதியில் உணர்ந்து கொண்டோம் ஒரு நாளில் - 3