♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒருபோதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே -2
நீங்காத நிழலாக வா இறைவா
1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய் (2)
ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்
2. நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் (2)
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீ தானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்