முதல் சனி சிந்தனைகள்.. வியாகுல மாதாவின் சிந்தனைகள்...

தேவ மாதாவின் மடியில் மரித்த அவர் பாலகனின் திருஉடல் ..

“ மகனே ! உன்னை செய்தார்கள் மகனே ! உன்னுடைய உடலில் காயங்கள் உள்ளதா?

அல்லது காயங்களுக்குள் உன் உடல் உள்ளதா என்று தெரியவில்லை.

ஓ என் தேவனே !..

என்னுடைய புதல்வனின் சதையை எத்தகைய கொடிய கசைகள் பதம் பார்த்துள்ளன. அதன்

நுனியில் கோர்க்கப்பட்டிருந்த உலோகத்தகடுகள் விலாவின் எழும்புகள் வெளியே

தெறியும் அளவுக்கு சதையைக் கிழித்துள்ளது. சாட்டைகளால் என் மகனின் உடலின்

சதைகள் தாறுமாறாக கிழிக்கப்பட்டு உடல் முழுவதும் இரத்தம் வழிந்து

உறைந்துள்ளதே. இரும்பு உலோகத்தால் உன் உடலில் சதைகள் கிழிக்கப்பட்டதால்

அதனால் ஏற்பட்ட பாதிப்பால் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தாய்.

சிலுவையில்

உன் உடல் எடை முழுவதும் ஆணிகளால் மட்டுமே தொங்கியதால் மரிக்கும் முன்

ஜன்னியும் கண்டதை நான் பார்த்தேனே.. அதனால்தானோ உன் உடல் கட்டையாய்

விரைத்துப் போயுள்ளதோ ! ஆ என் மகனின் திருக்காயங்கள் கரங்களிலும்,

கால்களிலும் எவ்வளவு ஆழமாக… எவ்வளவு கோரமாக சதைகள் கிழிக்கப்பட்டுள்ளது.

ஆணியை அடிக்கும் போது எவ்வளவு வலியால் நீ துடித்தாய்...

ஒரே ஒரு முறை

வலியால் சத்தமிட்டு விட்டு, நான் வேதனையால் நிலைகுழைந்து போகக்கூடாது

என்பதற்காக வலிகளை அணைத்தையும் உனக்குள்ளேயே அடக்கிக்கொண்டாயே (மாதாவும்

அதே காரியத்தைத்தான் செய்தார்கள். எங்கே தான் சத்தமிட்டு அழுதால் தன்

மகன் நிலைகுழைந்து போக்கக்கூடாது என்பதற்காக தன் வேதனைகளை அனித்தும்

அடக்கினார்கள். ஆனால் பாவம் கண்ணீரை மட்டும் அடக்க முடியவில்லை. ஆனால்

அதுவும் மாதாவின் முக்காடிற்குள் அடங்கிப்போனது).

என் மகனே…வலியால் வந்த

வார்த்தைகள் அனைத்தும் உன் திருவாய்க்குள் அடங்கிப்போனது..

என் கடவுளே ! எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்து விட்டதே ! ஓ அந்த ஆணி

அடிக்கும் சத்தம்.. என் மகனின் கரங்களையும், கால்களையும் அந்த சிலுவை

மரத்தோடு இணைத்து ஆணியை வைத்து சுத்தியலால் அடித்தார்களே.. அப்படி ஆணி

அடிக்கும்போது அந்த ஆணிகள் உன்னுடைய திருக்கரங்களிலும்,

திருக்கால்களிலுமா இறங்கியதே.. என்னுடைய இதயத்திலும் அல்லவா இறங்கியது.

ஓ! என் கடவுளே ! மீண்டும்.. மீண்டும் அந்த ஆணி அடிக்கும் சத்தம் இன்னும்

என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே. அந்த சத்தம் என் செவியை விட்டு

நீங்காதா?. (ஆணி அடிக்கும் ஓசையால் மாதா கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும்

அவதிப்பட்டார்கள்)

மகனே ! உன் சிரசில் எத்தனை கொடிய முள்முடி.. அது முள் முடியா அல்லது

முள்புதரா என்று தெறியவில்லை. எவ்வளவு ஆழமாக உனது திருசிரசையும், திரு

நெற்றியையும் பதம் பார்த்துள்ளன எத்தனை ஆழமான காயங்கள். முள்முடியாலும்,

முரடர்களின் அடியாலும் வந்த இரத்தத்தால் உன் அழகு திருமுடி அலங்கோலமாக

சிக்கி சின்னபின்னமாகி உரைந்து போயுள்ளதே…

ஓ ! தேவனே ! என் மகனின் இருதயத்தை கொடிய ஈட்டி எவ்வளவு ஆழமாக

குத்தியுள்ளது…..

ஆனால் நல்ல வேளையாக அது குத்தப்படும்போது நீ இறந்து

விட்டாய். இந்த ஒரு வலி மட்டும் உனக்கு தெறிந்திருக்காது. அதில் மட்டும்

எனக்கு சிறிய ஆறுதல். ஆனால் அந்த வலியையும் வேதனையும் அனுபவித்தது யார்

என்று உனக்கும், என் பிதாவுக்கும் மட்டுமே தெறியும்…..

உன் திருமேனியில்

உள்ள ஆழமான காயங்கள் அனைத்து மனுமக்களின் மீது நீ கொண்டுள்ள எல்லையற்ற

அன்பை பறைசாற்றுகிறது…

ஆனால் என் தெய்வீக திருமகனே ! இந்த உலகத்தில் இப்போது உன் வேதனையையும்,

என் வேதனையையும் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் ?

அவர்களுக்குத் தேவை.. பணம், பகட்டு, புகழ், போதை, சுய நலம், பொறாமை, பகை..

பாவம்...

இவைகளிலிருந்து எப்போது அவர்கள் மீளப்போகிறார்கள் எப்போது

அவர்கள் நம்மைத்தேடி வருவார்கள்…

உன்னுடைய திருப்பாடுகளும், என்னுடைய வியாகுலங்களும் நமக்கு மட்டும்தானா?

நம்மோடு பகிர்ந்து கொள்ள யாரும் வரமாட்டார்களா ?

நம் பிதாவையும்,

உன்னையும், என்னையும், பிறரையும் நேசிக்க நம்மோடு இனைந்து கொள்ள ஏதேனும்

பலி ஆன்மாக்கள் நமக்கு கிடைக்க மாட்டார்களா?

மனுமக்களை இரட்சிக்கும் பணி நமக்கு மட்டுமல்ல… நம்மோடு இனையும் பலி

ஆன்மாக்களுக்கும் உண்டு.. என்பதை புரிந்து நம்மோடு இனைந்து கொள்ள ஏதேனும்

ஆன்மாக்கள் கிடைப்பார்களா? என்று பார்க்கிறோம்..

நம் பரிசுத்த தேவ மாதாவின் வியாகுல புலம்பலுக்கு நம் பதில் என்ன?

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!