வருக வருகவே வசந்த மலர்களே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வருக வருகவே வசந்த மலர்களே

மலர்ந்திடவே மகிழ்ந்திடவே விரைந்து வாருங்கள் (2)

எழுக எழுகவே இறைவன் காணவே - 2

இனிமை ததும்ப இன்னிசையில் இசைந்து வாருங்கள்


1. சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை மறந்து வாழுவோம்

சுகம் நிறைந்து மலர்ந்த வாழ்வை மகிழ்ந்து வாழுவோம் (2)

ஆனந்தம் காணவே அவரிலே கூடுவோம்

இருகரங்கள் விரித்தவராய்

அழைக்கும் இறைவன் குரலைத் தேடி (2)


2. உலகம் யாவும் இனி அவரின் ஆட்சி ஆக்குவோம்

உண்மை விதைத்து உலகை அவரின் மாட்சியாக்குவோம் (2)

அமைதியின் தூதராய் அவரிலே வாழுவோம்

ஆதவனாய் ஒளிவீசி அழைக்கும் இறைவன் குரலைத் தேடி (2)