உலகின் ஒளியே உண்மையின் விளக்கே உயிரினில் கலந்திட வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உலகின் ஒளியே உண்மையின் விளக்கே

உயிரினில் கலந்திட வா

மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை

மாண்புறச் செய்திட வா (2)

இயேசு பாலனே இதயம் வாருமே

மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா


1. இருள் வாழ்வை அகற்றிட வருவீர்

புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)

பல கோடி உள்ளங்கள் மகிழ

நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)

எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்

என்றும் உந்தன் உறவைத் தேடும்

என் உயிரே வருவீர் - உலகின்


2. புகழ் தேடி அலைகின்ற போது என்னில்

புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)

கரைசேரா ஓடங்கள் ஆனோம்

நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2)

உந்தன் வரவால் உள்ளம் மகிழும்

எந்தன் உயிரும் உம்மில் இணையும்

விண்மலரே வருவீர் - உலகின்