என் தெய்வமே என்னில் எழுந்து வாருமே இதயம் திறந்து உதயம் காண அழைக்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் தெய்வமே என்னில் எழுந்து வாருமே - 2

இதயம் திறந்து உதயம் காண அழைக்கின்றேன் -2


1. ஆயனில்லா ஆடுகள் போல் அலைகின்றேன் உலகிலே

வேரறுந்த மரமதைப்போல் வேதனையில் மூழ்கினேன்

உயிரே உறவே உன்னை அழைத்தேன்

உலகின் முதலே உன்னைத் தொழுதேன்

காலமெல்லாம் காத்திடுவாய்


2. உருவிழந்த பறவையைப் போல் உலகெலாம் அழுகிறேன்

தாயைப்பிரிந்த சேயைப்போல் தரணியில் வாழ்கிறேன்

வாழ்வே வழியே வாழ வைப்பாய்

வாழ்வின் பொருளை உணரவைப்பாய்

காலமெல்லாம் காத்திடுவாய்