உனக்காகப் புகழ்கீதம் இசைத்திடுவேன் உன்னோடு உயிர் வாழ்ந்து களித்திருப்பேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உனக்காகப் புகழ்கீதம் இசைத்திடுவேன்

உன்னோடு உயிர் வாழ்ந்து களித்திருப்பேன் (2) இறைவா - 4


1. எளியவர் உரிமைகள் காத்திடவும்

அழுகையின் குரல் இங்கே அகன்றிடவும் (2)

என் ஆவி பொருளெல்லாம் அளித்திடுவேன் - 2

என் இறைவா நீ என்னோடு இருப்பதனால்


2. சிறுமையில் வாழ்வோர் வளம் பெறவும்

சிறைப்பட்டோர் விடுதலை அடைந்திடவும் (2)

குருடர்கள் விழிகொண்டு பார்த்திடவும் -2

ஒளியாக உலகினில் நானிருப்பேன்