உள்ளம் என்னும் கோயிலிலே வாராயோ இறைவா என்னுள்ளம் நிதம் வாழ நீ வேண்டும் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உள்ளம் என்னும் கோயிலிலே வாராயோ இறைவா

என்னுள்ளம் நிதம் வாழ நீ வேண்டும் இறைவா

இயலாக இசையாக நீங்காத நினைவாக

மழையாக நதியாக கதியாக வா


1. உள்ளம் என்னும் கோயிலிலே வாராயோ இறைவா

இன்பம் எங்கள் வாழ்வினிலே தாராயோ தலைவா (2)

நீயே என் தேடல் நீயே என் பாடல்

நீயே என் இராகம் தாளம் சங்கீதமாய் (2)

மழையாக நதியாக இசையாக வா

உணவாக உறவாக உயிராக வா


2. என் வாழ்வு உனைத் தேடும் பயணம் அன்றோ

உம் அன்பு எனை மேவும் தருணம் இன்றோ (2)

தாயன்பில் தலைசாய்க்கும் சேயாகினேன்

நான் உந்தன் பேரன்பில் குயிலாகினேன் (2)

ஆனந்தம் ஆனந்தம் என் விழியிலும் மொழியிலும் ஆனந்தம்

பேரின்பம் பேரின்பம் என் கனவிலும் நனவிலும் பேரின்பம்


3. உம் வாக்கு என் வாழ்வு விளக்கல்லவா

எம் போக்கு தனை மாற்றும் மொழியல்லவா (2)

உள்ளார்ந்த நலம் வேண்டி மன்றாடினேன்

உம் வாக்கில் கார்மேக மயிலாகினேன் (2)

ஆனந்தம் ஆனந்தம் என்...