♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர்
இன்னல் நீக்கி என்னை என்றும் காப்பவர் (2)
ஆனந்தம் அல்லேலூயா 2
இறைவன் இயேசு என்றும் என்னில் இருப்பதால் (2)
1. பாவக்கறைகள் நிறைந்த எந்தன் உள்ளத்தை - 2
பரமன் இயேசு குருதி சிந்திக் கழுவினார் - 2
அமைதி இன்றி அலைந்த எந்தன் மனத்தினை - 2
ஆவி அனுப்பி அன்பு பொழிந்து மாற்றினார் - 2
2. இரவும் பகலும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன் - 2
இயேசு அருளால் இனி எனக்குக் குறையில்லை - 2
இன்பம் துன்பம் எது வந்தாலும் பயமில்லை - 2
இயேசு எனது இறைவனாக இருப்பதால் - 2