அழகிய கவிதையில் பாடிடுவேன் அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அழகிய கவிதையில் பாடிடுவேன்

அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் (2)


1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்

ஆற்றல் அனைத்தும் எனக்களித்தார் (2)

எரித்திடும் துயரில் என்னைக் காத்தார்

எனவே அவர் என் ஆண்டவரே


2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே

துயரக் கறைகள் படர்கையிலே (2)

அன்பின் கரத்தால் அரவணைத்தார்

ஆகவே அவர் என் ஆண்டவரே