நானே ஒரு காணிக்கைப் பொருளாய் இறைவா உம் திருப்பலிப் பீடம் வந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நானே ஒரு காணிக்கைப் பொருளாய்

இறைவா உம் திருப்பலிப் பீடம் வந்தேன் -2 (2)


1. மலராக என் நெஞ்சம் கனியாக என் கண்கள்

நெல்மணியாய் நான் சிந்தும் வியர்வைத்துளி (2)

திராட்சை இரசமாக என் கண்ணீர் அப்பமாக என் ஜீவன்

உடல் தாங்கி நானே வந்தேன் (2)


2. இசையாக ஆசைகள் இயலாக எண்ணங்கள்

கலையாக நான் கற்றப் பாடங்களே (2)

புது ஒளியாக உம் வார்த்தை இருளாக என் வாழ்க்கை

எனை நானே தந்தேனய்யா (2)