அன்புலகம் படைத்திடுவோம் அன்பே இறைவன் என்போம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்புலகம் படைத்திடுவோம் அன்பே இறைவன் என்போம்

அன்பில்லா மனிதனையோ இருளின் பிள்ளை என்போம்

தம் மகனை நம் பொருட்டு கடவுள் அனுப்பி வைத்தார்

அவர் நம்மை அன்பு செய்து மீட்பை மலர வைத்தார்


1. நம்முள் நிலவும் அன்பு இறைவனின் அன்பு என்று

நிறைவுடன் நம்பி வாழ்வோம் அழியா இன்பம் காண்போம்

ஆவியில் பங்கு கொண்டு அவருள் நிலைத்து நின்று

இறைவனின் இல்லம் ஆவோம் இன்பமே இறைவன் என்போம்

இயேசுவையே இறைமகனாய் ஏற்பவர் மனதிலே

இறையவனோ நிலைத்திடுவான் மனிதனும் அவரில் நிலைப்பான்


2. அன்பில் அச்சம் இல்லை அச்சம் அன்பில் அகலும்

அச்சம் கொள்ளும் மனமோ அன்பில் நிலைப்பதில்லை

இறைவனை அன்பு செய்வேன் என்று சொல்லும் மனிதன்

அயலான் அன்பை மறந்தால் அவனோ வாழ்வில் பொய்யன்

கடவுளுக்கும் மனிதனுக்கும் இணையாய் நிலவும் அன்பு

இறைமகனின் வாழ்வினிலே நிலைத்திடும் மீட்பின் அன்பு