♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆலயம் இறை ஆலயம் அருமையான ஓவியம்
இறைவன் உறையும் காவியம்
இணைவோம் அவரின் இல்லிடம்
1. ஆலயமணியே அவர் குரலாம்
அழைக்கும் இறைவன் அரும் ஒலியாம்
பீடமே அன்பின் பிரசன்னமாம்
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னமாம்
2. இறைவனின் வார்த்தை மனுவாகும்
மறைஉடல் இயேசுவின் உடலாகும்
இறைமக்கள் இறைவனின் தரிசனம்
தரிசனம் தரிசனம் தரிசனமாம்