புதுயுகமும் பிறந்ததின்று புது வாழ்வும் மலர்ந்ததின்று

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதுயுகமும் பிறந்ததின்று புது வாழ்வும் மலர்ந்ததின்று

ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆனந்த பண்பாடுவோம் (2)

அல்லேலூயா -10

வல்லதேவவன் வார்த்தையே ஆ ..மனித உருவில் வந்ததே ஆ

வரலாற்றின் மையம் ஆனதே (2)

புது சமுதாயம் மலர்ச்சி கொண்டதே இறை

சமுதாயம் எழுச்சி கொண்டதே


1. அடிமை விலங்கு அனைத்தும் இன்று அழிந்து போனதே

உரிமை வாழ்வு உலகினிலே உதயமானதே ஆ (2)

எளியவரும் நலிந்தவரும் -2

இயேசுபிரான் வாக்கினிலே ஏற்றம் காணவே

எங்கும் நீதி என்ற செய்தி உண்மையானதே (2)


2. ஏற்றத்தாழ்வு பாகுபாடு எங்கும் மறையுதே

இறையரசின் சமத்துவம் இனி எதிலும் மலருதே ஆ...(2)

வானகமும் வையகமும் -2

விடுதலையின் ராகங்களைச் சேர்ந்து பாடுதே

புதிய வானம் புதிய வையம் புவியில் தோன்றுதே -2