தங்கச் சுடரே வா எங்கள் உயிரே வா
மரியின் மகனே வா மண்ணில் வாழ வா
பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே
இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே
1. பாலைவன பயிரினைப் போல் மக்கள்
வாடி நிற்கும் வேளையிலே
உயிராக வந்தாய் வரம் கோடி தந்தாய்
விண்பாதை நீயல்லவோ அருள்
வெள்ளம் சுரந்தோட ஆகாயங்கள் திறந்தனவோ
1. மாட்டுத் தொழு மஞ்சத்திலே விண்
காட்டும் தெய்வம் தவழ்கின்றதே
கோடான கோடி ஏழைகள் வாழ்வில்
கோலங்கள் நீ ஆகினாய் - புது
வாழ்வு புவிகாண பூபாளங்கள் முழங்கிடுதே