காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர்தானே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை தந்தோம் கர்த்தாவே

ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே

காணிக்கை யார் தந்தார் நீர்தானே


1. நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது

மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் - 2

ஆகாயம் மாறும் கடவுளின் மகனே

ஆனாலும் உம் அன்பு மாறாது


2. ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே

ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)

கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே

கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே