கலங்காதே என் நெஞ்சமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கலங்காதே என் நெஞ்சமே

கர்த்தர் இயேசு அன்பு செய்ய காலமெல்லாம் காத்திருக்க

கலக்கம் ஏன் நெஞ்சமே - நெஞ்சமே

கலக்கம் ஏன் நெஞ்சமே


1. இருளும் புயலும் உன்னை என்ன செய்திடும்

அருளும் அன்பும் பொழியும் இயேசு அருகிலிருக்கையில் (2)

வாழ்வில் வீழ்ந்து வருந்தும் போது தோள் கொடுக்கிறார்

தாழ்வில் வாடும் போது தயவு காட்டுவார்

தயவு காட்டுவார் இயேசு தயவு காட்டுவார்


2. உலகம் வெறுக்கும்போதும் உன்னில் நிலைக்கிறார்

உயிர்ப்பும் உயிரும் ஈந்து நாளும் உடனிருக்கிறார் (2)

துன்ப துயரம் தூரப்போகும் துணிந்து நின்றிடு

தூய தேவன் அருளை என்றும் நம்பிடு

என்றும் நம்பிடு அவரை என்றும் நம்பிடு