♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவன் கரங்கள் இசைக்கும் சுரங்கள்
இனிய யாழிதழ் நான்
பரமன் தோட்டத்தில் புதுமை பொங்க பூத்த சிறுமலர் நான் (2)
1. வரங்கள் கோடி வழங்கினாலும் வாழவைப்பவராம்
குறைகள் கோடி மறைந்து போக நிறைவு தந்தவராம் (2)
என் அன்பு தேவன் அவரேதான் என் ஜீவராகமும் அவரேதான் -2
2. உதயம் தேட புதியப் பாதை அழைத்து வந்தவராம்
கால்கள் சோர்ந்து களைத்த நேரம் தோள்கள் சுமந்தவராம் (2)
என் அன்பு தேவன் அவரேதான் என் ஜீவராகமும் அவரேதான் -2