ஆண்டவரே ஆண்டவரே எங்கள் வேண்டுதல் அன்போடு தந்தருளுமே


ஆண்டவரே ஆண்டவரே எங்கள் வேண்டுதல்

அன்போடு தந்தருளுமே


1. திருத்தந்தையும் ஆயர்களுமே உள்ளநலமோடு வாழவேண்டுமே

பணியாளர் குருக்களும் பரிவுள்ள கன்னியரும்

இறைமாந்தரும் இணைய வேண்டுமே

இறைவா இறைவா உமதாசீர் வேண்டுமே


2. அன்பு நீதி உண்மையோடு சமத்துவமும் மலர வேண்டும்

அவனியெங்கும் அமைதியும் அழகு மனிதநேயமும்

திசைகள் தோறும் திளைக்க வேண்டும்

இறைவா தலைவா உமதாசீர் வேண்டுமே


3. வறியவர்கள் வாழ்வு பெற்றிட எளியவர்கள் ஏற்றம் பெற்றிட

உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து

உய்யவும் உரிமையனைத்தும் வென்றெடுக்கவும்

உலகமாளும் இறைவா உமதாசீர் வேண்டுமே


4. வங்கக்கடல் தாலாட்டினில் பொங்கும் எங்கள் உள்ளங்களே

ஒற்றுமையில் வாழ்ந்திடின் பாயும் அருள் வெள்ளமே

இன்றும் என்றும் சந்தோஷமே

இறைவா தலைவா உமதாசீர் வேண்டுமே


5. கிறிஸ்தரசர் பெருவிழாவிலே களிகூரும் நாங்களெல்லாமே

நற்கருணை சபையிலே விசுவாச சுடர்களாய்

ஒளிரும் வரம் அருள வேண்டுமே

வான்படையின் இறைவா வரமருள்வாயே