♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
அவர் பலியினில் கலந்திட அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
அவர் அன்பினில் வளர்ந்திட அழைக்கின்றார்
ஒன்றாய் கூடிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் வழிதனில் நடந்திட அழைக்கின்றார்
1. உண்மை உறவினில் வளர்ந்திடவும் நம்மில்
அன்பும் அமைதியும் பெருகிடவும் லலலலா
சாதிகள் சண்டைகள் மறைந்திடவும் எங்கும்
சமத்துவ வாழ்வு நிலை பெறவும்
இயேசு அழைக்கின்றார் நம்மை அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
இறையரசினைப் பரப்பிட அழைக்கின்றார்
2. பகிர்விலும் நட்பிலும் வாழ்ந்திடவும் நம்மில்
ஒற்றுமை உணர்வு ஓங்கிடவும் லலலலா
பகைவர்க்கும் அன்பு செலுத்திடவும்
என்றும் துன்புறுவோருக்கு ஜெபித்திடவும்
இயேசு அழைக்கின்றார் நம்மை அழைக்கின்றார்
இறையரசினைப் பரப்பிட அழைக்கின்றார்