♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
புதிய பூமியே புதுப்பாட்டு பாடி வா
புனித நாளிலே இறை மாட்சி காண வா (2)
வானிலே கோலமாய் வான தூதர் பாடவே
பூவிலே நாமுமே தேவன் பீடம் கூடுவோம் (2)
1. விண்ணோரெல்லாம் கொண்டாடவே
இந்நாளையே பொன்னாளென
மண்ணோருமே கொண்டாடுவோம்
நம் பாடலும் விண்ணேறவே
மறைவாழ்வுத் தேடும் நாமெல்லோரும் ஜீவஊற்று இயேசுபாதம்
நாடி வாழ்வைத் தியாகமாக்குவோம் (2)
2. சங்காகியே பண்பாடுவோம் சங்கீதத்தால் ஒன்றாகுவோம்
எந்நாளுமே அன்பானவர் பொன் தேகத்தில் பங்காகுவோம்
இறை வாக்கு கூறும் வாழ்வுத் தேடி மானிடத்தின் ஜீவ நாடி
நாதன் இயேசு பாதை செல்லுவோம் (2)