தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய் தலைவனுன் பீடத்தில் காணிக்கையாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்

தலைவனுன் பீடத்தில் காணிக்கையாய் (2)

தகுதியில்லா என்னை உம் அன்பினால்

தயவுடன் ஏற்பாய் பலிப்பொருளாய்


1. உழைப்பின் பலனைப் படைத்திட வந்தேன்

உம் திருப்பதத்தில் எனை ஏற்க வேண்டும் (2)

உம் அருள் துணை நம்பி வாழ்வினைத் தொடர்ந்திட -2

உவந்து நீர் ஏற்பீர் ஏழை என் காணிக்கை

இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்

இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்


2. ஆறுதல் இன்றி வாழ்ந்திடும் வறியோர்

ஆனந்தம் அடைந்திட அடியேனைத் தேர்ந்தீர் (2)

அன்பதன் கொடைகளை அவனிக்கு அளித்திட -2

அர்ப்பண பலி என்னை அன்பாய் ஏற்பீர் - இறைவா ...