அன்பின் விழுதுகள் படர்ந்திடவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பின் விழுதுகள் படர்ந்திடவே

மனித மாண்புகள் உயிர்த்திட

மனச் சிறையின் கதவுகள் உடைந்திடவே

இறை உணர்வுகள் வாழட்டும் - 2 (2)


1. வழிபாட்டில் காணும் உணர்வுகள் நம்

வாழ்வில் நதியாய்ப் பாயட்டும் (2)

வேதத்தில் வாழும் பண்புகள் நம்

மனதில் வாழ்வாய் அமையட்டும் (2)

புதிய பாதையில் தொடர்ந்து புதுயுகம் நாம் படைப்போம் -2

இனி வரும் நாளில் புது வாழ்வில் இறைஇன்பம் காண்போம்


2. வார்த்தைகள் பேசும் உண்மைகள் நம்

இதயத்தில் உயிராய் வாழட்டும் (2)

உரிமையில் பூத்த உறவுகள் புதுக்

கவிதைகள் பாடி மகிழட்டும் - புதிய பாதையில்