பரம்பொருளே எமைத் தரவே பலிப்பீடம் நோக்கி வருகின்றோம் பலிப் பொருளாய் உம்மில் பலன் தரவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரம்பொருளே எமைத் தரவே - 2

பலிப்பீடம் நோக்கி வருகின்றோம்

பலிப் பொருளாய் உம்மில் பலன் தரவே

எம்மை பலியாக முழுதும் தந்தோம் -2


1. மானிடரின் உழைப்பும் மண் தந்திடும் பலனும்

மகிழ்வோடு உந்தன் மலர்ப்பாதம் வைத்தோம் (2)

எளியோரின் வாழ்வில் ஏற்றங்கள் கண்டு -2

பலநூறு மடங்கு பலன் தரவே வந்தோம்


2. இறைவார்த்தை எம்மில் நிறைவேறும் நாளில்

நிறையாட்சி மண்ணில் நிலையாட்சி ஆகும் (2)

பணிவோடு இணைந்து பணிகள் புரிந்து -2

பலநூறு மடங்கு பலன் தரவே வந்தோம்