நான் காணாமல் போன ஆடல்லவா கர்த்தர் என்னைத் தேடுகிறார்

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் காணாமல் போன ஆடல்லவா

கர்த்தர் என்னைத் தேடுகிறார் (2)


1. ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை

அன்புமீறி நான் நடந்தேன் (2)

ஆபேலைக் கொன்ற காயினைப் போல

மனுக்கொலை நான் புரிந்தேன்

ஆரம்ப முதலே ஆபத்தில் இருந்தேன்

அன்பர் என்னைத் தேடுகின்றார்


2. கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தார்

காட்டித் தந்த யூதாசானேன் (2)

கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்தேன்

பெரும் பழி நான் சுமந்தேன்

கல்லோடு முள்ளில் கால்பின்னி கிடந்தேன்

கர்த்தர் என்னைத் தேடுகின்றார்