இன்று பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று மலர்ந்த நாள் மண்ணிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இன்று பிறந்த நாள் வாழ்த்துகள்

இன்று மலர்ந்த நாள் மண்ணிலே

அன்பின் குழந்தை இயேசுவே

உந்தன் மழலை மொழி கேட்கவே

எந்தன் மனமும் தினம் ஏங்குதே

இன்று பிறந்த நாள் வாழ்த்துகள்


1. ஒரு விண்தெய்வம் நம்மோடு மண்மீதிலே

மழலையாய் மலர்ந்ததே

அந்த விண்வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே

விடியலாய்ப் புலர்ந்ததே

இனி வேற்றுமை மறையட்டும் எங்கும் வேதனை தீரட்டும்

வையம் மகிழும் வான்படை போற்றும்

வான தேவன் வரவில் - நல்ல

இதயம் நிறையும் உதயம் மலரும்

தேவமைந்தன் உறவில் - இன்று


2. ஒரு விண்தெய்வம் இந்நாளில் நம் இல்லத்தில்

புதையலாய்த் தவழ்ந்ததே

அந்த விடிவெள்ளி நம் வாழ்வில் ஒளியேற்றவே

புதுமையாய் ஒளிர்ந்ததே

இனி ஒற்றுமை பெருகட்டும் போர் கலகங்கள் ஓயட்டும்

வையம் மகிழும் வான்படை போற்றும்

வான தேவன் வரவில் - நல்ல

இதயம் நிறையும் உதயம் மலரும்

தேவமைந்தன் உறவில் - இன்று