மன்னவா உன் வாசல் தேடி ஓடி நான் வந்தேன் உன்முகத் தரிசனம் கேட்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மன்னவா உன் வாசல் தேடி ஓடி நான் வந்தேன்

உன்முகத் தரிசனம் கேட்டேன் (2)

உன்பதம் அமர்ந்து உன் முகம் பார்த்து

உன்மொழி கேட்டால் போதுமே (2)


1. அன்பு கமழும் மென்மையான அனுபவம் எல்லாம்

அழகு வாய்ந்த இனிமையான நினைவுகள் எல்லாம் (2)

உன்னிடம்தானே பேச இயலும் -2

உவந்து எல்லாம் கூறமுடியும் கூறமுடியும்


2. துன்பம் நெஞ்சில் இறக்கி வைத்த சோகச்சுமை எல்லாம்

நடந்தவைகள் அழித்துத் தகர்த்த நம்பிக்கை எல்லாம் (2)

புரிந்து கொள்வார் எவரும் இல்லை -2

உன்னைத் தவிர யாரும் இல்லை யாரும் இல்லை