நம் சொந்த விருப்பங்கள், ஆசைகள், தேவைகள், சென்ற வார இன்ப துன்பங்கள், பிரச்சனைகள் மற்றும் கவலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு நம் நற்கருணை ஆண்டவரிடம் சரண்டர் ஆவோம்.
நம்மிடம் அவர் என்ன தேடுகிறார், என்ன எதிர் பார்க்கிறார். அவரின் ஆசைகள் என்ன என்று அவரிடம் கேட்போம். எனென்றால் நாம் நம் விருப்படி வாழ்வதை விட அவர் விருப்படி வாழ்வதுதான் நமக்கு பாதுகாப்பனது (Safe). அதில் நிறைகுறைகள் வந்தால் அவர் பார்த்துக்கொள்வார் என்று விட்டு விடலாம்
குறிப்பாக நம்முடைய விருப்பங்கள் ஆசைகளைக் கொண்டு வாழ்வது நெல் மூட்டையையோ, அரிசி மூட்டையையோ துக்கிக்கொண்டு நடப்பது போலாகும்.
அவர் விருப்படி வாழ்ந்து பஞ்சு மூட்டையை தூக்கி கொண்டு நடப்பது போலாகும். அதிலும் நமக்கு டையர்ட் (அலுப்பு) ஏற்பட்டால் அந்த மூட்டையை கீலே போட்டு அதன் மேலே சுகமாக ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்..
இப்பல்லாம் மக்கள் எதையாவது ஒன்றை பற்றிக்கொண்டும், பிடித்துக்கொண்டும், எதை எதையோ தேடிக்கொண்டும், என்ன கிடைத்தாலும் ஒருவித திருப்தி, நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை..
இயேசுவைத் தவிர வேறு யாராலும், எதுவாலும் 100% ஆத்ம திருப்தி, நிறைவு தர முடியாது என்பது ஊர் அறிந்த, உலகம் அறிந்த உள்ளம் அறிந்த உண்மை.
இந்த உண்மையை அறிந்தும் அவரை நாடாமல் தேடாமல் இருக்கலாமா? அதற்கு தேவையான வழியையும், மருந்தையும், அவரிடமே கேட்கலாமே !
அவரே உணவாக நம்மிடம் உரைய வரும்போது அதுக்கு உண்டான எனர்ஜி (வலிமை) கிடைக்காமல் போய்விடுமா என்ன?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !