அன்பு என்பது வல்லமை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பு என்பது வல்லமை ஆக்கமளிக்கும் ஆற்றலே

அர்த்தமாகிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழுமே

அன்பு என்பது வல்லமை


1. நின்று நிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே -2

தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே பணிந்ததே -2

ஆள விடுங்கள் அன்பையே - 3 வாழும் தெய்வம் நம்மிலே - 3


2. உயிர்கள் அனைத்தின் இயக்கமாய்

இயங்கும் உலகின் ஏக்கமாய் (2)

ஏங்கும் மனங்களின் இறைவனாய்

அனைத்தின் நிறைவும் அன்புதான் (2)

ஆள விடுங்கள் அன்பையே - 3 வாழும் தெய்வம் நம்மிலே - 3