ஏழை என்னை காணிக்கையாகத் தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஏழை என்னை காணிக்கையாகத்

தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே - 2


1. என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் - என்

உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் (2)

யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்


2. என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான்

எதிர் கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் (2)

யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்