♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆவியைத் தரவேண்டும் இறைவா
தூய ஆவியைத் தரவேண்டும் தயவாய் - எம்மை
ஆட்கொள்ள வரவேண்டும் விரைவாய்
1. கோயிலாய் நெஞ்சத்தைக் கொண்டிட வேண்டும்
கோபுரம் போல் ஞானம் ஓங்கிட வேண்டும்
மூவகைப் பகையினை வென்றிட வேண்டும்
மூச்சிலும் பேச்சிலும் நின்றிட வேண்டும்
2. சான்று பகர்ந்திட ஆர்வமும் வேண்டும்
சத்தியம் காத்திட வீரமும் வேண்டும்
நோன்புகள் ஏற்றிட ஆவலும் வேண்டும்
நோய்நொடி தீர்த்திட ஆற்றலும் வேண்டும்
3. ஆறுதல் ஆறாகப் பாய்ந்திட வேண்டும்
ஆனந்த வெள்ளத்தில் தோய்ந்திட வேண்டும்
மாறுதல் இல்லாத நன்மனம் வேண்டும்
மாசற்ற வாழ்வினில் நிலைத்திட வேண்டும்