கடவுளின் மீட்புத்திட்டத்தை கடவுளோடு இணைந்து இறுதிவரை தன் திருக்குமாரனின் பாடுகள் ( அவரோடு பாடுகள் பட்டும் ) மற்றும் உயிர்ப்பிற்கு பின்னும் தளர்ந்திருந்த அவர் சீடர்களை திடப்படுத்தி ஜெபித்து அவர்களுக்கு தூய ஆவியைப் பெற்றுக்கொடுத்து நற்செய்திப் பணியை ஆற்ற உலகெங்கும் அனுப்பி வைத்து அவர்களுக்கும், வளர்ந்து வந்த திருச்சபைக்கும் தாயாக இருந்தார், அப்போஸ்தலர்கள் தளர்ந்த போதெல்லாம் அவர்களை திடப்படுத்தினார். ஊக்குவித்தார்..
இரண்டு உதாரணங்களே பெரிது :
நம் பெரிய யாகப்பர் ஸ்பெயின் நாட்டில் நற்செய்திப் பணி ஆற்றி அது பெரிய வெற்றி பெறாமல் தளர்ந்திருந்திருந்த போது, தான் எருசலேமில் உயிரோடு வாழ்ந்துகொண்டிருந்த போதே அவருக்கு காட்சி கொடுத்து திடப்படுத்தியதை ஏற்கனவே பார்த்தோம்..
இரண்டாவதாக நம் இந்திய தேசத்து அப்போஸ்தலர் புனித தோமையார். நன் திருத்தாயார் மரணம் அடைந்த போது தான் அருகில் இல்லைலை. நம் தேவதாய் மரணம் அடையும் முன் வெவ்வேறு நாடுகளில் நற்செய்திப்பணி ஆற்றிக்கொண்டிருந்த அத்தனை பேரும் அங்கே ஆஜர், புனித பெரிய யாகப்பர் மற்றும் புனித தோமையார் தவிர. பெரிய யாகப்பர் அதற்கு முன் வேதசாட்சியாகி விட்டார். புனித தோமையார் இங்கிருந்து செல்லும் முன் நம் தேவ தாயார் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்
இதனால் மனம் வருந்திய தோமையார் “ நான் தேவதாயாரைப் பார்த்தே ஆகவேண்டும் என்று முரண்டு பிடித்து கல்லறையை திறக்க நம் தேவதாயார் அங்கே இல்லை அதற்குள் விண்ணேற்றம் அடைந்து விட்டார்.
உடனே நம் தோமையார் மண்டியிட்டு ஜெபிக்க நம் தேவ தாய் காட்சி கொடுத்து தன் இடைக்கச்சையை அவர் அன்பிற்கு பரிசாகக் கொடுத்தார்..
இதுமட்டுமல்ல நம் முதல் பாப்பரசர் இராயப்பர், அப்போஸ்தலராக அழைக்கப்பட்ட புனித சின்னப்பர் என்று அனைத்து அப்போஸ்தலர்களும் நம் தேவதாயாரின் மேன் அவ்வளவு அன்பும், பாசமும், பக்தியும் வைத்திருந்தார்கள்..
தூய தமத்திருத்துவத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம் நாம் எப்போதெல்லாம் நம் தாயின் திருப்பெயரைச் சொல்லுகிறோமோ அப்போதெல்லாம் அவர்கள் மகிழ்கிறார்கள்.. அதிலும் குறிப்பாக ஜெபமாலையில் “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்று ஜெபிக்கும்போது அவர்கள் மிகவும் மகிழ்கிறார்கள்..
அவர்கள் மட்டுமா மோட்சமே மகிழ்கிறது..
நம் தாயின் திருப்பெயரின் மகிமையும், அவர் திருப்பெயரின் தூய்மையின் மகிமையையும் சொல்லிக்கொண்டே போகலாம்..
ஒரே ஒருவனுக்கும்தான் நம் தாயின் பெயரைக் கேட்கும் போதெல்லாம் திகில் ஆட்கொள்ளும்.. அவன்தான் சாத்தான்.. வாடிகனில் பேயோட்டும் சடங்கில் அவன் சொல்லிய சாட்சியம்…
தொடர்ந்து ஜெபித்து அவன் பயப்படும் விசயங்களை அவன் வாயிலிருந்து. அதாவது நரகத்தின் இரண்டாவது பெரிய பேயான பெயல்சபூல் வாயிலிருந்து வரவைத்தார்கள்.
அவன் பயப்படும் மூன்று விசயங்கள்..
1. ஒன்று ஆண்டவர் இயேசுவின் திரு நாமம்.
2. இரண்டாவது மரியாயின் திரு நாமம்.
3. மூன்றாவது உத்தரியம்..
பிசாசுக்கு மாதாவின் பெயர் பிடிக்கவே பிடிக்காது. பெந்தகோஸ்தேகாரர்களுக்கும் மாதாவின் பெயரைப் பிடிக்காது.. மாதாவின் பெயரை சொல்லும்போது கூட ‘ மரியா, மரியா, என்றுதான் சொல்லுவார்கள்.. இது ஊருக்கே தெறியும்..
ஆனால் இதே வார்த்தையை நம்மவர்கள் ஏன் கையில் எடுத்தார்கள்? எப்படி உச்சரிக்க மனம் வருகிறது என்று தெரியவில்லை.. அதிலும் திவ்ய திருப்பலியில்..
என்றும் கன்னியான “மாட்சி மிக்க மரியாள்” ஏன் ‘புனித மரியா‘ என்று சுருக்கப்பட்டது..ஏன்?
அதை ஒரு தனிப்பதிவில் பார்ப்போம்.
யாரும் எப்படியும் சொல்லிவிட்டு போகட்டும். நாம் சொல்ல வேண்டாம்.
தேவதாய், தேவமாதா, மாதா என்று அழைப்போம். மாதாவின் பெயரை உச்சரிக்க வேண்டிய இடத்தில் தேவ அன்னை மரியம்மாள் என்று அன்போடு அழைப்போம்...
மாதாவின் திருப்பெயரின் தூய்மையை நினைவு கூறும் இன்னாளில் ஜெபமாலை சொல்லி நம் தேவதாயைப் பற்றிபோற்றி தூய தமத்திருத்துவத்தை மகிமைப்படுத்துவோம்.
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!